இந்தக் கொள்கை ஆவணமானது யாரேனும் ஒரு நபரினால் அல்லது நிறுவனத்தினால் Fintrex நிதி வர்த்தக வலைத்தளத்தின் மூலம் வழங்கப்பட்ட தகவல்களை உள்ளடக்குகின்றது. இக்கம்பெனியானது உங்கள் தனியுரிமை எல்லா விதத்திலும் பாதுகாக்கப்படுகின்றது என்பதை நிச்சயப்படுத்துவதுடன் உங்களை அடையாளம் கண்டு கொள்வதற்காக இந்த வலைத்தளத்தினால் திரட்டப்பட்ட தகவல்கள் எவையும் வர்த்தக நோக்கங்களுக்காக ஒரு மூன்றாம் நபரிடம் கையளிக்கப்படமாட்டாது.
நாம் என்ன தகவல்களை திரட்டுகின்றோம்?
கடின நகலில் அல்லது ஆவணங்களில் நிரப்பித் தரும்படி அல்லது தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின்னஞ்சல், கடிதம் அல்லது வேறு விதமாக அல்லது நாங்கள் உங்களை சந்திக்கும் தருணங்களில் ,உங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கேட்போம்.
எமது வலைத்தளத்தில் ஆடர் செய்யும்போது அல்லது பதிவு செய்யும்போது (பொருத்தமான விதத்தில்) நீங்கள் உங்களது பெயர், மின்னஞ்சல் விலாசம், கடித விலாசம், தொலைபேசி இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றை தருமாறு கேட்கப்படுவீர்கள்நாங்கள் ஏன் தகவல்களை வைத்திருக்கின்றோம்?
தொடர்ச்சியான சட்டத் தேவை ஒன்று காணப்படும்போது உங்களிடமிருந்து திரட்டப்பட்ட தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வைத்திருப்போம். உதாரணமாக:
நீங்கள் எங்களிடம் கோரிக்கை செய்த பொருள் அல்லது சேவையினை உங்களுக்கு வழங்குவதற்காக,
ஒப்பந்த கடமைபாடுகளை உங்களுக்கு வழங்குவதற்காக;
பொருத்தமான சட்ட ,வரி அல்லது கணக்கீட்டு தேவைகளுக்கு இணங்குவதற்காக;
எங்களுக்கு இடையில் , உங்களிடத்தில் மற்றும் ஏதேனும் பொருத்தமான மூன்றாம் நபருக்கு இடையிலான அக்கோரிக்கைகள் அல்லது புகார்கள் தொடர்பில் சட்ட ஆலோசனை எடுத்தல், அக் கோரிக்கைகள் தொடர்பில் எமது சட்ட உரிமையை செயல்படுத்துதல் அல்லது பாதுகாத்தல் உள்ளடங்களாக ஏதேனும் கோரிக்கைகள் அல்லது புகார்களை பாதுகாப்பதற்காக அல்லது முகாமை செய்வதற்காக. இது நீதிமன்றத்தில், ஒழுங்குமுறை அதிகாரசபையில் அல்லது ஒம்புட்ஸ்மனிடத்தில் எமக்கு எதிராக உங்களால் வழங்கப்பட்ட கோரிக்கை அல்லது புகார் ஆகியவற்றை உள்ளடக்கும்.
எமக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை செய்முறை படுத்துவதற்கு ஒரு சட்டரீதியான தேவையொன்று தொடர்ச்சியாக காணப்படாதவிடத்து நாம் அவற்றை அழித்து அல்லது அப்புறப்படுத்துவோம் ,அல்லது அது சாத்தியமற்ற நிலையில் (உதாரணமாக உங்கள் தனிப்பட்ட தகவல்கள் காப்பு பிரதி காப்பகத்தில் களஞ்சியப்படுத்தபட்டுவிட்டால்) அதை அழித்தல் சாத்தியமாகும் வரையில் உங்கள் தகவல்களை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தி அதனை மேலதிகமாக செயற்படுத்துவதில் இருந்து அப்புறப்படுத்தி தனிமைப்படுத்தி வைப்போம்.
நாங்கள் எவ்வாறு உங்களது தகவல்களை பாதுகாக்கிறோம்?
நாங்கள் உங்களது (அல்லது எவரேனும் மூன்றாம் நபரின்) தனிப்பட்ட தகவல்களை எமது நம்பகமான சட்டரீதியான நன்மை கருதி அவற்றைத் திரட்டி பாவிப்போமாயின் நாங்கள் சரியான தருணத்தில் அது எவ்வகையான சட்டரீதியான நன்மை என்பதை உங்களுக்கு தெளிவாக தெரிய வைப்போம்.
உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதுஎன்பதை நிச்சயப்படுத்துவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.அதிகாரமளிக்கப்படாத அணுகல் அல்லது வெளிப்படுதலைத் தவிர்ப்பதற்காக , நாங்கள் ஆன்லைனில் திரட்டும் தகவல்களை கவனமாக பாதுகாப்பதற்காக பொருத்தமான சரீர, இலத்திரனியல் மற்றும் முகாமைத்துவ செயல்முறைகளை அமைத்து வைத்துள்ளோம்
உங்கள் தகவல்களை பகிர்தல்
உங்களை தனிப்பட்ட விதத்தில் அடையாளப்படுத்தும் தகவல்களை நாங்கள் விற்கவோ ,வியாபார படுத்தவோ அல்லது வெளி நபர்களுக்கு கை மாற்றம் செய்யவோ மாட்டோம். இது, இந்தத் தகவல்களை இரகசியமாக வைத்திருப்பதற்கு இணங்கிய, நமது வலைதளத்தை இயக்குவதற்கு உதவி செய்யும், வியாபாரத்தை நடத்தும் அல்லது உங்களுக்கு சேவை செய்யும் எவரேனும் நம்பத்தகுந்த மூன்றாம் நபரை உள்ளடக்காது. சட்டத்திற்கு இணங்கும வகையிலும் எமது வலைத்தளத்தின் கொள்கைகளை செயற்படுத்துவதற்கும் அல்லது எமது அல்லது ஏனைய தரப்பினர்களின் உரிமைகளை, சொத்துக்களை அல்லது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொருத்தனது என நாம் நம்பும் நேரத்தில் உங்களது தகவல்களை வெளிப்படுத்துவோம். எவ்வாறாயினும், தனிப்பட்ட விதத்தில் அடையாளம் காணப்பட முடியாத விருந்தினர்களின் தகவல்கள் சந்தைப்படுத்தல், விளம்பரப்படுத்தல் அல்லது ஏனைய பாவனைக்காக ஏனைய தரப்பினரிடம் வழங்கப்படலாம்.
குக்கீஸ் இனை பயன்படுத்தல்
நாம் சில சந்தர்ப்பங்களில் நீங்கள் எமது வலைத்தளத்தில் உள்ளபோது உங்கள் கணினி சம்பந்தப்பட்ட தகவல்களை திரட்டுவோம். இதன் மூலம் எமது சேவைகளை மேம்படுத்தவும் பொருத்தமான போது எமது வலைதளத்தின் பயன்பாடு தொடர்பிலான புள்ளிவிபர தகவல்களை வழங்கவும் எமக்கு இயலுமாயிருக்கும்.
அவ்வகையான தகவல்கள் உங்களை தனிப்பட்ட விதத்தில் அடையாளப்படுத்தாது. இது எமது விருந்தினர்கள் மற்றும் எமது வலைத்தளத்தில் அவர்களது பயன்பாடு ஆகியவற்றுக்கான புள்ளிவிபரத் தகவல்களாகும். இந்தப் புள்ளி விபரத் தகவல்கள் எவ்வித தனிப்பட்ட விபரங்களை அல்லது வேறு எவற்றையும் அடையாளப்படுத்தாது.
மேலே சொன்னதைப் போன்று, ஒரு குக்கீஸ் பைஃல் இனைக் கொண்டு உங்கள் பொதுவான இணைய பயன்பாடு தொடர்பான தகவல்களை நாம் திரட்டக்கூடும்.பாவனையின் போது இந்த குக்கீஸ்கள் உங்களது கணினிக்கு நேரடியாக பதிவிறக்கம் செய்யப்படும். உங்கள் கணினியின் ஹார்ட் டிரைவினுள் இடமாற்றம் செய்யப்படும் தகவல்களை குக்கீஸ் கொண்டிருப்பதால் உங்களது கணினியின் ஹார்ட் ட்ரைவினுள் இந்த குக்கீஸ் பைஃல் களஞ்சிய படுத்தப்படும். அவை எமது வலைத்தளத்தையும், நாங்கள் உங்களுக்கு வழங்கும் சேவைகளையும் மேம்படுத்துவதற்கு எமக்கு உதவுகின்றன.
எல்லா கணினிகளும் குகீஸ் இனை மட்டுபடுத்துவதற்கான இயலுமையைக் கொண்டிருக்கும். இதனை உங்கள் பிரவுசரில் குகீஸ் இனை மட்டுப்படுத்துவதற்கான அமைப்பினை செயற்படுத்துவதன் மூலம் செய்து கொள்ளலாம்.நீங்கள் குகீஸ் இனை மட்டுப்படுத்துவதை தெரிவுசெய்தீர்களாயின் எமது வலைத்தளத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை அணுக முடியாது என்பதை தயவுசெய்து கருத்தில் கொள்ளவும்.
ஏனைய வலைதளங்களுக்கான லிங்குகள்
விரும்பினால் ஏனைய வலைத்தளங்களுக்கு செல்வதற்கான லிங்குகளை எமது வலைதளம் கொண்டிருக்கும். எவ்வாறாயினும் இந்த லிங்குகளை பயன்படுத்தி எமது வலைத்தளங்களை விட்டு நீங்கள் நீங்கினால் ஏனைய வலைதளங்கள் மீது எமக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகையால், அவ் வலைதளங்கள் இந்த தனியுரிமை அறிக்கையினால் ஆளப்படமாட்டாது என்பதால் நீங்கள் அவ்வலைதளங்களுக்கு சென்று வழங்கும் தகவல்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மீது எம்மால் எவ்விதப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு சந்தேகமுள்ள வலைதளத்தின் மீது நீங்கள் மிகுந்த கவனத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்பதுடன் அவற்றின் தனியுரிமை அறிக்கை வாசிக்க வேண்டும்.