வியாபார நிதி


Fintrex 360 பாகை வர்த்தக நிதி வசதியானது உண்மையில், இறக்குமதி வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் புத்தாக்கமானதும் தனித்துவமானதுமான  நிதி பொருளாகும்

Fintrex 360 பாகை வர்த்தக நிதியானது,உங்களது வழங்குனர்களுடனும் வாடிக்கையாளர்களுடனும் ஒரு சிறந்த உற வினை பேணும் உங்கள் முக்கிய வணிகத் தொழிற்பாட்டின் மீது கவனம் செலுத்துவதற்கு அனுமதி வழங்கும் ஒரு முழுமையான தொழிற்படு மூலதன தீர்வாகும்.Fintrex ஆனது உங்களது வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு, துணை சேவைகளான அப்புறப்படுத்தல், இருப்பை களஞ்சியப்படுத்தல், இருப்பு முகாமைத்துவம் மற்றும் விற்பனை பேரேட்டு முகாமைத்துவம் ஆகியவற்றுக்கு நிதி ஏற்பாடு செய்வது முதற்கொண்டு ஏனைய அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்கிறது.

முக்கிய அம்சம்

வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான பாதுகாப்பு /பிணையானது Fintrex இனால் நியமிக்கப்பட்ட களஞ்சிய சாலைகளில் இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்த பொருட்களாக இருக்கும் , அவை கட்டாயமாக நிலையான சொத்துக்கள் மீதான அடைமானமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்க  வேண்டிய அவசியமில்லை.


360 பாகை வர்த்தக நிதியின் கீழ் வழங்கப்படும் நிதி பொருட்கள்

 • இருப்புகளை இறக்குமதி செய்வதற்காக கடன் கடிதங்களை திறத்தல்
 • இறக்குமதி ரசீதுகளை முடிவுறுத்துவதற்காகவும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சுங்கத் தீர்வையை செலுத்துவதாகவுமான இறக்குமதி கடன்கள்

360 பாகை வர்த்தக நிதி மூலம் வழங்கப்படும் சேவைகள்

 • ஒவ்வொரு களஞ்சியசாலையிலிருக்கும் பொருட்கள் மீதும் காப்புறுதி செய்வதற்கான  சிறந்த காப்புறுதி ஒப்பந்தங்களை நாங்கள் ஏற்பாடு செய்கின்றோம்.
 • வழங்குனரின் களஞ்சியசாலையில் இருந்து உங்களது களஞ்சியசாலைக்கு பொருட்களை அப்புறப்படுத்தி கொண்டு செல்லுதல்.
 • களஞ்சிய சாலையில் உள்ள பொருட்களின் இருப்புக்கள் மற்றும் பொருட்களின் நகர்வு  என்பவற்றின் பதிவுகள்/ இருப்புகளை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்.

எமக்கு தேவைப்படுவது என்ன

 • நிறுவன பதிவு சான்றிதழ்
 • இயக்குனர் மற்றும் பங்குதாரர்களின் விபரங்கள்
 • பதிவு செய்யப்பட்ட விலாசத்தின் விவரங்கள்
 • தணிக்கை செய்யப்பட்ட கடந்த மூன்று வருடங்களுக்கான கணக்குகள்
 • அண்மைய முகாமைத்துவ கணக்குகள்
 • கடந்த ஆறு மாதங்களுக்கான விற்பனை விலையுடன் கூடிய மாத அடிப்படையிலான விற்பனை அளவுகள்
 • கடந்த ஆறு மாதங்களில் பாவனை செய்யப்பட்ட மூலப் பொருட்களின் வகைகள் கொள்வனவு செய்யப்பட்ட அளவுகள் மற்றும் கொள் விலை
 • கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி கூற்று
 • வியாபாரத் திட்டம் மற்றும் திட்டமிடப்பட்ட காசுப்பாய்ச்சல் கூற்று (பொருந்தும் எனில்)
 • வருமான வரி ரசீதுகள் (கடந்த நிதி வருடத்துக்கானது)
 • பிணையாக வழங்கக்கூடிய வற்றின் விபரங்கள் (பொருந்தும் எனில்)

 


அதனை துரிதப்படுத்துவதற்கு

Whatsap,Viber, to,

+94 776 200 100

Submit quick inquiry formClick Here